பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

262 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ், பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங் சிங்கின் அதிரடியான ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் மொத்தமாக 523 ரன்கள் சேர்த்தன. நேற்றையப் போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சைத் தவிர கொல்கத்தா அணியின் அனைத்துப் பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டன.

இந்த நிலையில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வைரலாகி வருகிறது.

போட்டி குறித்து அவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தயவு செய்து யாராவது பந்துவீச்சாளர்களை காப்பற்றுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com