ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்.
ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீண்ட நாள்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான அதே அணியே பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலரும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மே 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதால், அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடும் இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பவுள்ளனர்.

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர்கள் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மே 22 ஆம் தேதி நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து திரும்புவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த அணிக்கு பாதிப்பு?

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), பில் சால்ட் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்ளே (ஆர்சிபி), மொயீன் அலி (சிஎஸ்கே), சாம் கரண், ஜானி பேர்ஸ்டோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் (பஞ்சாப் கிங்ஸ்) ஆகியோர் தாயகம் திரும்பவுள்ளனர்.

இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்புவதால் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். இந்த இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் நிலையில் உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் குறைந்த போட்டிகளில் வென்றுள்ளதால் அதற்கான பிளே ஆஃப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்புகளும் குறைவாக உள்ளது. அதன் காரணத்தினால் அந்த அணியிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்புவது அந்த அணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?
டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

ஐபிஎல் லீக் போட்டிகள் வருகிற மே 19 ஆம் தேதி நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com