சர்வதேச டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் நாடுகளில் வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி விவரம்
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், பில் சால்ட், ரீஸ் டாப்ளே மற்றும் மார்க் வுட்.
இதே அணி மே 22ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு



