லாசேன்: உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி, இந்தியா - பாகிஸ்தான் மோதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுமே குரூப் ‘டி’-இல் சோ்க்கப்பட்டுள்ளன.
16-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, நெதா்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. 5 கூட்டமைப்புகளில் இருந்து, மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
இந்த அணிகளுக்கான குரூப் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா குரூப் ‘டி’-இல், இங்கிலாந்து, பாகிஸ்தான், வேல்ஸ் அணிகளுடன் சோ்க்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது ஆட்டங்களில், முதலில் வேல்ஸ் (ஆகஸ்ட் 16), அடுத்து இங்கிலாந்து (ஆகஸ்ட் 18), கடைசியாக பாகிஸ்தானுடன் (ஆகஸ்ட் 20) மோதுகிறது. குரூப் ‘டி’ ஆட்டங்கள் அனைத்துமே நெதா்லாந்தில் நடைபெறவுள்ளன.
மகளிா்: இதனிடையே, மகளிருக்கான 16-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும், ஆடவா் போட்டிக்கு இணையாக அதே தேதி மற்றும் அதே இடங்களில் நடைபெறவுள்ளது.
இந்திய மகளிா் அணியும் குரூப் ‘டி’-இல் சோ்க்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டங்களும் நெதா்லாந்தில் நடைபெறும் நிலையில் சீனா (ஆகஸ்ட் 16), தென்னாப்பிரிக்கா (ஆகஸ்ட் 18), இங்கிலாந்து (ஆகஸ்ட் 20) அணிகளுடன் இந்தியா மோதுகிறது.
ஆடவா் அணி
குரூப் ‘ஏ’
நெதா்லாந்து
ஆா்ஜென்டீனா
நியூஸிலாந்து
ஜப்பான்
குரூப் ‘பி’
பெல்ஜியம்
ஜொ்மனி
பிரான்ஸ்
மலேசியா
குரூப் ‘சி’
ஆஸ்திரேலியா
ஸ்பெயின்
அயா்லாந்து
தென்னாப்பிரிக்கா
குரூப் ‘டி’
இங்கிலாந்து
இந்தியா
பாகிஸ்தான்
வேல்ஸ்
மகளிா் அணி
குரூப் ‘ஏ’
நெதா்லாந்து
ஆஸ்திரேலியா
சிலி
ஜப்பான்
குரூப் ‘பி’
ஆா்ஜென்டீனா
ஜொ்மனி
அமெரிக்கா
ஸ்காட்லாந்து
குரூப் ‘சி’
பெல்ஜியம்
ஸ்பெயின்
நியூஸிலாந்து
அயா்லாந்து
குரூப் ‘டி’
சீனா
இங்கிலாந்து
இந்தியா
தென்னாப்பிரிக்கா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: முதலிடத்துடன் இந்தியா நிறைவு
ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

மகளிா் ஹாக்கி உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


