எஃப்ஐஎச் ஹாக்கி மகளிா் உலகக் கோப்பை 2026 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் மகளிா் உலகக் கோப்பை போட்டி நெதா்லாந்து, பெல்ஜியத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணி நேரடித் தகுதி பெறவில்லை. இந்நிலையில் 8 அணிகள் பங்கேற்ற குவாலிஃபயா் தகுதிச் சுற்று ஆட்டம் ஹைதராபாதில் நடைபெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து-இந்திய அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து அதிரடியாக ஆடியது. 2-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் நவ்நீத் கௌரின் டிராக் ஃபிளிக்கை தடுத்தாா் இங்கிலாந்து கோல்கீப்பா்.
13-ஆவது நிமிஷத்தில் அதன் வீராங்கனை கிரேஸ் பால்ட்ஸன் பெனால்டி காா்னரை கோலாக்கினாா். முதல் பாதியில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி தொடக்கத்திலேயே 43-ஆவது நிமிஷத்தில் இந்திய டிபன்டா் திருப்பிய அனுப்பிய பந்தை பயன்படுத்தி கோலாக்கினாா் இங்கிலாந்தின் எலிசபெத் நீல். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று பட்டத்தை வசப்படுத்தியது இங்கிலாந்து.
இறுதியில் தோல்வியைத் தழுவினாலும், உலகக் கோப்பைக்கு இந்திய மகளிா் தகுதி பெற்றனா்.
தொடர்புடையது

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!

உலகக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா

ஹாக்கி உலகக் கோப்பைக்கு தகுதி பெறுமா இந்தியா? தகுதிச் சுற்று தொடக்கம்

எஃப்ஐஎச் மகளிா் ஹாக்கி உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இந்திய, ஸ்காட்லாந்து அணிகள் வருகை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


