சிஎஸ்கேவின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம்!

சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் படம்: சிஎஸ்கே / எக்ஸ்

சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

கடந்த 15ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. அந்த வரலாற்றை மாற்ற ஆர்சிபி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஏற்கெனவே இறங்கிவிட்டனர்.

ருதுராஜ் கெய்க்வாட்
அதிரடியான தொடக்கம் தேவை: கம்மின்ஸ் திட்டம்!

கோப்பையுடன் ஒவ்வொரு அணி வீரர்களும் புகைப்படம் எடுப்பது வழக்கம். அதன்படி சிஎஸ்கே சார்பாக தோனி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர் ருதுராஜ் பங்கேற்றுள்ளார்.

2019 முதல் சென்னை அணியில் விளையாடும் ருதுராஜ் இதுவரை 52 போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார்.

எம்.எஸ். தோனி கேப்டன் இந்த ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக ஆவது விளையாடுவாரா என ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அடுத்த கேப்டனாக ஜடேஜா இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் இந்த முடிவு மிகவும் எதிர்பாராத விதமாக இருக்கிறது. இந்த முடிவு தோனியால் எடுக்கப்பட்டதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com