தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடல் பாடுகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!

ஐபிஎல் தொடக்க விழாவில் தோனிக்காக நீ சிங்கம்தான் பாடலை பாடவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடல் பாடுகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!
படம்: சிஎஸ்கே / எக்ஸ்

ஐபிஎல் தொடக்க விழாவில் தோனிக்காக நீ சிங்கம்தான் பாடலை பாடவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை (மார்ச்.22) 8 மணிக்கு இந்த வருடத்தின் முதல் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனைகள் ஆன்லைனில் தொடங்கியதுமே விற்றுத்தீந்தது. பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.

தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடல் பாடுகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!
சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட் விலை குறைப்பு!

போட்டிக்கு முன்னதாக மாலை 6.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொள்ளவிருக்கிறார். அதில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடலை பாடவுள்ளதாகக் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் நீ சிங்கம்தான் பாடல் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகளையும் கிரிக்கெட் போட்டிகளையும் நேரலையாக ஜியோ சினிமாவில் பார்க்கலாம்.

தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடல் பாடுகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!
தலைமை குறித்து மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே புதிய கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை தோனி வீரராக மட்டுமே விளையாடுவார் என பயிற்சியாளர் ஃபிளெம்மிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் பல விடியோக்களில் ஏற்கனவே தோனிக்காக நீ சிங்கம்தான் பாடலை எடிட் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com