
முன்னாள் சிஎஸ்கே அணியின் தலைவர் தோனி ரன் அவுட் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியின் 17-ஆவது சீசன், சென்னையில் கோலாகலமான கலை நிகழ்ச்சிகளுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பெங்களூரு 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுக்க, சென்னை 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 176 ரன்கள் சோ்த்து வென்றது.
இந்தப் போட்டியில் தோனி 2 கேட்ச்சுகள், 1 ரன் அவுட் செய்து அசத்தினார். ஓவரின் கடைசி பந்தில் தோனி கீப்பராக இருந்து ரன் அவுட் செய்யும் விடியோ வைரலாகி வருகிறது.
ஐபிஎல்-இல் தோனி மொத்தமாக 138 கேட்ச்கள், 180 விக்கெட்டுகளை கீப்பராக இருந்து பெற்றுள்ளார். அதிகமாக ரன் அவுட் செய்தவரும் தோனிதான். தினேஷ் கார்த்திக் 133 கேட்ச்கள், 169 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் ஸ்டம்பிங்கில் தோனி 41, தினேஷ் கார்திக் 36 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.