இது எனது 10-ஆவது ஐபிஎல் தொடர்: ஹார்திக் கூறியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இது எனது 10-ஆவது ஐபிஎல் தொடர்: ஹார்திக் கூறியது என்ன?
படங்கள்: ஹார்திக் பாண்டியா/ இன்ஸ்டா

மும்பை இந்தியன்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ஹார்திக் பாண்டியா ஐபிஎல் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மா. 2013 முதல் 2023 வரை மும்பை அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். கடைசி 2 சீசன்களாக சரியாக செயல்படாத காரணத்தினால் அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது. பின்னர் பாண்டியாவை கேப்டனாக மாற்றியது.

இது எனது 10-ஆவது ஐபிஎல் தொடர்: ஹார்திக் கூறியது என்ன?
தோனிக்காக ‘நீ சிங்கம்தான்’ பாடல் பாடுகிறேன்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு!

இது குறித்து ஹார்திக் பேசிய விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஹார்திக் கூறியதாவது:

இது எனது 10ஆவது ஐபிஎல் தொடர். எனது வளர்ச்சி, பயணம் என எல்லாமே என்னுடைய வழியில் நடந்தமைக்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக கருதுகிறேன். மீண்டும் மும்பை அணியுடன் சேர்வது என்பது எப்போதும் எனது இதயத்தில் இருப்பதுதான்.

ஐபிஎல்தான் எனக்கு அடையாளத்தைத் தந்தது. ஐபிஎல்தான் எனக்கு அனைத்தையுமே தந்தது. அது இல்லை என்றால் நான் இன்னும் பரோடாவில்தான் இருந்திருப்பேன். ஆனால் இதே ஹார்திக்காக இருந்திருக்க மாட்டேன்; வேறொரு ஹார்த்திகாக இருந்திருப்பேன் என சிரித்துக்கொண்டே பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com