பதற்றமாக இருக்கிறது: 454 நாள்களுக்குப் பிறகு விளையாடும் ரிஷப் பந்த்!

கார் விபத்து காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ரிஷப் பந்த் தற்போது மீண்டும் ஐபிஎல் விளையாடவிருக்கிறார்.
பதற்றமாக இருக்கிறது: 454 நாள்களுக்குப் பிறகு விளையாடும் ரிஷப் பந்த்!

கார் விபத்து காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த ரிஷப் பந்த் தற்போது மீண்டும் ஐபிஎல் விளையாடவிருக்கிறார்.

அதிரடி ஆட்டத்துக்கு பெயர்போனவர் ரிஷப் பந்த். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த் தற்போது முழுவதுமாக குணமடைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாட ரிஷப் பந்த் முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.

98 ஐபிஎல் போட்டிகளில் 2838 ரன்கள் எடுத்துள்ளார்.இதில் 15 அரைசதங்கள், 1 சதம் அடங்கும். 147.97 ஸ்டிரைக் ரேட் என்பது குறிப்பிடத்தக்கது.

454 நாள்களுக்குப் பிறகு ரிஷப் பந்த் ஐபிஎல் விளையாட வருகிறார்.

பதற்றமாக இருக்கிறது: 454 நாள்களுக்குப் பிறகு விளையாடும் ரிஷப் பந்த்!
அதிக ரன் அவுட் சாதனை: வைரலாகும் தோனியின் விடியோ!

பஞ்சாப் அணியுடன் தில்லி அணி இன்று மாலை 3.30 மணிக்கு விளையாடவிருக்கிறது.

இது குறித்து ரிஷப் கூறியதாவது:

நடுக்கம், பதற்றம், உற்சாகம் என அனைத்தும் கலவையாக இருக்கிறது... ஆனால் அதே நேரம் கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சி. முதல் போட்டியை விளையாடுவதில் ஆர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக மாறிக்கொண்டு வருகிறேன். என்னால் முடிந்தவரை பேட்டிங் செய்யவிருக்கிறேன். பெரிதாக யோசிக்கவில்லை. ஒரு நேரத்தில் அன்றைய நாளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். எனது 100 சதவிகிதத்தை கொடுப்பேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com