லக்னௌவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரம்!

லக்னௌக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னௌவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரம்!

லக்னௌக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்றைய நாளின் முதல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் லக்னௌ அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

லக்னௌவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரம்!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இணைந்த பதிரானா!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடியது. இருப்பினும், ரியான் பராக் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 52 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதிக்கட்டத்தில் துருவ் ஜுரெல் 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.

லக்னௌவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரம்!
முதல் போட்டிக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட விடியோ!

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. லக்னௌ தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மோஷின் கான் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து, தேவ்தத் படிக்கல் 0 ரன்னிலும், ஆயுஷ் பதோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். லக்னௌ 11 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

லக்னௌவை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரம்!
ரஸலின் அதிரடி ஆட்டத்துக்கு காரணம் இவர்தான்: டேனியல் வெட்டோரி

இதனையடுத்து, கே.எல்.ராகுலுடன் தீபக் ஹூடா இணைந்தார். இந்த இணை சிறிது நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருப்பினும், தீபக் ஹூடா 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கே.எல்.ராகுலுடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். நிக்கோலஸ் பூரன் 41 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ அணியால் 173 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நண்ட்ரே பர்கர், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால் மற்றும் சந்தீப் சர்மா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com