தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயம்!
Swapan Mahapatra

தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயம்!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடும் நடராஜனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.
Published on

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடும் நடராஜனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2024 தொடரின் முதல் 7 போட்டிகளும் சொந்த மண்ணில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் தனது சொந்த மண்ணில் மும்பையை எதிர்த்து விளையாடுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹார்திக் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.

நடராஜன், மார்கோ ஜான்சனுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட், உனத் கட் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

தமிழக வீரர் நடராஜனுக்கு மீண்டும் காயம்!
மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!

கடந்த 2022இல் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

32 வயதாகும் நடராஜன் 48 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் யார்க்கர் வீசுவதன் மூலம் புகழ்பெற்றவர் நடராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com