மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!

முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!
Published on
Updated on
1 min read

முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக 5 கோப்பைகளை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மா. 2013 முதல் 2023 வரை மும்பை அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார். கடைசி 2 சீசன்களாக சரியாக செயல்படாத காரணத்தினால் அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹார்திக் பாண்டியா ஒரு ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறார். இந்தாண்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாண்டியாவை மும்பை அணி வாங்கியது. பின்னர் பாண்டியாவை கேப்டனாக மாற்றியது.

மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!
மும்பைக்காக 200வது போட்டியில் ரோஹித் சர்மா!
அஹமதாபாத் போட்டியில் மைதானத்துக்குள் நுழைந்த நாய். ரசிகர்கள் ஹார்திக் என கூச்சலிட்டனர்.
அஹமதாபாத் போட்டியில் மைதானத்துக்குள் நுழைந்த நாய். ரசிகர்கள் ஹார்திக் என கூச்சலிட்டனர்.

இதனால் கோபத்தில் இருந்த ரசிகர்கள் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியாவை மிகவும் கிண்டல் செய்யும் விதமாக சப்தமாக கூச்சலிட்டனர்.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி, “ரோஹித் சர்மா ரசிகர்கள் யாருமே அவரது கேப்டன்சியை ஹார்திக்கிடம் கொடுத்ததை ஏற்கவில்லை. 5 கோப்பைகளை வென்ற ரோஹித்தை கேப்டன்சியில் இருந்து நீக்கியது எதற்காக எனவும் தெரியவில்லை. அது ரசிகர்களிடம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதை மைதானத்தில் பார்க்க முடிந்தது.

மும்பை ரசிகர்கள் மும்பையில் நடைபெறும் போட்டியில் இன்னும் கூடுதல் சப்தத்துடன் ஹார்திக் பாண்டியாவை கிண்டல் செய்வார்கள். ஆனால், இதையெல்லாம் ஹார்திக் பாண்டியா தனது இயற்கையான சுபாவத்தினால் அற்புதமாக கையாள்வார் என நம்புகிறேன்.

மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!
மற்ற அணிகளைவிட சிஎஸ்கே வித்தியாசமானது: ஆட்ட நாயகன் ஷிவம் துபே!
மும்பை ரசிகர்கள் பாண்டியாவை கிண்டல் செய்தாலும்...: முன்னாள் வீரர் ஆதரவு!
ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

முதல் போட்டியின்போது, தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது ரசிகர்கள் ஹார்த்திக் பாண்டியாவை கூச்சலிட்டு கிண்டல் செய்தபோதும் கோபப்படாமல் அமைதியாக இருந்தது அவரது திடமான சுபாவத்தினை வெளிக்காட்டுகிறது.

இந்தியாவிலேயே சிறந்த ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரராக ஹார்திக் இருக்கிறார். சொல்லப்போனால் உலகிலேயே திறமையான வீரர் எனலாம். காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதால் முதல் போட்டியில் தனது முழுத் திறனையும் வெளிக்காட்ட முடியாமல் இருந்திருக்கலாம் ஆனால் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என நம்புவதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com