மற்ற அணிகளைவிட சிஎஸ்கே வித்தியாசமானது: ஆட்ட நாயகன் ஷிவம் துபே!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
ஷிவம் துபே.
ஷிவம் துபே. R Senthilkumar

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மிகப் பெரிய வெற்றியைப் (63 ரன்கள் வித்தியாசத்தில் ) பெற்றது.

இந்தப் போட்டியில் 23 பந்துகளில் 51 ரன்கள் அடித்த ஷிவம் துபே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதில் 2 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிகமாக சிக்ஸர் அடிப்பதால் துபேவை சென்னை ரசிகர்கள் ‘ஆறுச்சாமி’ என அன்போடு அழைக்கிறார்கள்.

ஷிவம் துபே.
ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷிவம் துபே, “சிஎஸ்கே மற்ற அணிகளை விட வித்தியாசமானது. இந்த நிர்வாகம் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அதனால் அவர்களுக்கு சில வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும். எனக்கு எதிராக பௌன்சர் பந்துகளை வீசுவார்களெனத் தெரியும். நான் அதற்கேற்ப பயிற்சி எடுத்து தயாராக இருக்கிறேன். அணி நிர்வாகம் என்னிடம் அதிகமான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடும்படி கேட்டுக்கொண்டது. நான் அதைதான் செய்கிறேன்” எனக் கூறினார்.

ஷிவம் துபே.
பாயும் புலி: தோனியின் வைரல் புகைப்படம்!

கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டிக்குப் பின்பு அளித்த பேட்டியில், “தோனியும் அணி நிர்வாகமும் துபேவின் வளர்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் பங்காற்றியுள்ளார்கள். துபே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்” எனக் கூறியுள்ளார்.

பயிற்சியாளர் மைக் ஹஸி, “பௌன்சர் பந்துகளுக்கு எதிராக துபே தனியாக பயிற்சி எடுத்து வருகிறார்” எனக் கூறியுள்ளார்.

முதல் போட்டியில் பௌன்சர் பந்துகளுக்கு தடுமாறிய ஷிவம் துபே தற்போது சிறப்பாக விளையாடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com