நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

விமானத்தில் டிக்கெட் இல்லை! ரயிலில் மும்பை திரும்பிய துபே!

ஷிவம் துபே ரயிலில் பயணம் மேற்கொண்டது பற்றி...

ஷிவம் துபே - ANI

Published On :11 மார்ச் 2026, 3:18 pm IST

டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு அகமதாபாத்தில் இருந்து விமானம் கிடைக்காததால் ரயில் மூலம் இந்திய அணியின் ஷிவம் துபே மும்பை திரும்பியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் அவர்வர் சொந்த ஊர்களுக்கு விமானங்கள் மூலம் திரும்பினர். ஆனால், இந்திய ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவுக்கு மும்பை திரும்புவதற்கு விமானத்தில் டிக்கெட் கிடைக்கவில்லை.

இதனால், அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு 3 ஏசி ரயில் பெட்டியில் துபேவும் அவரது மனைவியும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சாலைப் போக்குவரத்து மாற்றாக இருந்தாலும், விரைந்து செல்வதற்காக அதிகாலை ரயில் பயணத்தை மேற்கொண்டதாக ஆங்கில ஊடகத்துக்கு துபே பதிலளித்துள்ளர்.

ரசிகர்களிடம் சிக்காமல் பயணித்தது எப்படி?

துபே, அவரது மனைவி மற்றும் நண்பர் ஆகியோர் அதிகாலை 5.10 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் ரயிலின் 3 ஏசி பெட்டியில் முன்பதிவு செய்துள்ளனர்.

தொப்பி, முகக்கவசம், டி-சர்ட் அணிந்திருந்த துபே, அகமதாபாத் ரயில் நிலையத்துக்கு வெளியே காரில் காத்திருந்துள்ளார். ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்னதாக நெரிசலுக்கு மத்தியில் யாருக்கும் தெரியாமல் ரயிலில் ஏறியுள்ளார்.

ஒருவேளை துபே அடையாளம் காணப்பட்டால், நிலைமையை சமாளிக்க அவரின் பாதுகாப்புக்காக ஒரு காவல்துறை அதிகாரியும் உடன் பயணித்துள்ளர்.

ரயில் ஏறியவுடன் மேல் படுக்கையில் படுத்துக் கொண்டதாக துபே தெரிவித்துள்ளார். இருப்பினும், டிக்கெட் பரிசோதகர் பெயரைப் பார்த்ததும் ஷிவம் துபே என்றால் கிரிக்கெட் வீரரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எதற்காக இங்கே வரப் போகிறார்? என்று அவரது மனைவி சமாளிக்க டிக்கெட் பரிசோதகர் நகர்ந்துவிட்டார். இருப்பினும், பகல் நேரத்தில் போரிவலி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும் என்பதால் துபே சற்று பதட்டத்துடன் இருந்துள்ளார்.

இதனிடையே, துபேவின் வருகையை அறிந்த மும்பை காவல்துறையினர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, அவரை பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

துபேவை வரவேற்க விமான நிலையத்தில் எதிர்பார்த்திருந்த அதிகாரிகளுக்கு, ரயிலில் வந்து அவர் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள துபே 235 ரன்கள் எடுத்துள்ளார். 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இறுதிக் கட்டத்தில் அதிரடி காட்டி இந்திய அணியின் வெற்றிக்கு பல தருணங்களில் உதவினார்.

Summary

Indian cricketer Shivam Dube returned to Mumbai by train! There was no ticket on the flight!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.