டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நெதர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லீக் சுற்றில் நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது இந்திய அணி.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க பேட்டர்களாக அபிஷேக் சர்மா-இஷான் கிஷன் களமிறங்கினர்.
அபிஷேக் 3-ஆவது டக்: அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்û பயில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட்டானார். நெதர்லாந்து பெüலர் ஆர்யன் தத் பந்தில் போல்டானார் அபிஷேக். இதனால் மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இஷான் கிஷன் 18 ரன்களுக்கு ஆர்யன் தத் பந்தில் போல்டாகி நடையைக் கட்டினார்.
பின்னர் ஆட வந்த திலக் வர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் இணை 34 ரன்களைச் சேர்த்து அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அப்போது இந்திய அணி 110/4 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
சிக்ஸர் ஷிவம் 66: தொடர்ந்து 5-ஆவது டெüனில் ஆட வந்த ஷிவம் டுபே அதிரடியாக சிக்ஸர் பவுண்டரியாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 66 ரன்கள் அடங்கும். பொறுப்பாக ஆடிய ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 3 சிக்ஸருடன் 21 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து லோகன் வேன் பந்தில் வேண் டர் மெர்விடம் கேட்ச் தந்தார்.
ரிங்கு சிங் 6 ரன்களுடன் களத்தில் நிற்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 193/6 ரன்களைக் குவித்தது.
பெüலிங்கில் நெதர்லாந்து தரப்பில் லோகன் வேன் பீக் 3, ஆர்யன் தத் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நெதர்லாந்து தோல்வி 176/7: 194 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 176/7 ரன்களைக் குவித்து தோல்வியைத் தழுவியது.
அந்த அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 33, ஸாச் சாச்செட் 26, நோவா குரோர்ஸ் 25, மைக்கேல் லெவிட் 24 ரன்களைச் சேர்த்தனர்.
பெüலிங்கில் இந்தியத் தரப்பில் வருண் சக்கவரத்தி 3, ஷிவம் டுபே 2விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியும் குரூப் ஏ பிரிவில் 4 ஆட்டங்களிலும் வென்ற சிறப்புடன் சூப்பர் 8 பிரிவுக்கு தகுதி பெற்றுள்ளது. ஷிவம் டுபே ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மற்றவர்கள் நினைப்பது முக்கியமல்ல, அதிரடியாக விளையாடுங்கள்; அபிஷேக் சர்மாவுக்கு கம்பீர் ஆதரவு!

அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்; பவர்பிளேவில் இந்தியா அசத்தல்!

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?

சுழற்பந்துவீச்சை வைத்து அபிஷேக் சர்மா விக்கெட்டை வீழ்த்த திட்டமிடுகிறதா தென்னாப்பிரிக்கா?
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


