மும்பைக்காக 200வது போட்டியில் ரோஹித் சர்மா!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அந்த அணிக்காக 200வது போட்டியில் விளையாட இருக்கிறார்.
ரோஹித் சர்மா (இடது), ஹார்திக் பாண்டியா (வலது)
ரோஹித் சர்மா (இடது), ஹார்திக் பாண்டியா (வலது)
Published on
Updated on
1 min read

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அந்த அணிக்காக 200வது போட்டியில் விளையாட இருக்கிறார்.

2008இல் டெக்கான் சார்ஜஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளை விளையாடினார் ரோஹித் சர்மா. 2008-2010 வரை அந்த அணிக்காக மட்டும் 45 போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் 2011 முதல் மும்பை இந்தியனஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மும்பை அணிக்காக 199 போட்டிகளில் விளையாடி 5,084 ரன்கள் அடித்துள்ளார்.

ரோஹித் சர்மா (இடது), ஹார்திக் பாண்டியா (வலது)
மற்ற அணிகளைவிட சிஎஸ்கே வித்தியாசமானது: ஆட்ட நாயகன் ஷிவம் துபே!

மொத்தமாக 244 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 6,254 ரன்கள் அடித்துள்ளார். இதில் 42 அரைசதம், 1 சதம் அடங்கும். சராசி 29.64. ஸ்டிரைக் ரேட் 130.16 ஆகும்.

மும்பை அணிக்காக கேப்டன்சி செய்து 5 முறை கோப்பையை வென்று தந்துள்ளார் ரோஹித் சர்மா. தற்போது ஹார்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ரோஹித் சர்மா (இடது), ஹார்திக் பாண்டியா (வலது)
ஷுப்மன் கில்லுக்கு ரூ. 12 லட்சம் அபராதம்!

சன் ரைசரஸ் ஹைதராபாத் அணிக்காக எதிராக இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை அணிக்காக மட்டும் 200வது போட்டியில் களமிறங்குகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com