விமர்சனத்துக்குள்ளான ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு!

மும்பை அணியின் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு மோசமாக விமர்சிக்கபட்டுள்ளது.
ஹார்திக் பாண்டியா
ஹார்திக் பாண்டியாபடம்: ஹார்திக் பாண்டியா / எக்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277/3 ரன்களைக் குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிக ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணியின் பந்து வீச்சு மோசமானதாக இருந்ததாகவும் ஹார்திக்கின் தலைமைப் பண்பினையும் பலரும் விமர்சித்தனர்.

ஹார்திக் பாண்டியா பேட்டிங்கில் 20 பந்துகளுக்கு 24 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

ஹார்திக் பாண்டியா
“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!

முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், “ஹார்திக் பாண்டியாவின் தலைமைப் பண்பு சுமாராக இருந்தது. ரன்கள் அதிகமாக அடிக்கப்பட்டுகொண்டிருக்கும்போது பும்ராவுக்கு பந்து வீச வாய்ப்பு தராதது குறித்து என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மும்பை அணியின் மொத்த வீரர்களும் 200க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும்போது கேப்டன் 120 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடக் கூடாது” எனக் கூறியிருந்தார்.

dinmani online
ஹார்திக் பாண்டியா
பந்து வீச்சாளர்களைக் குறைகூற முடியாது: தோல்வி குறித்து ஹார்திக் பாண்டியா!

யூசுப் பதான், “ உங்களது சிறந்த பந்து வீச்சாளரான பும்ராவுக்கு ஓவர் தராதது மோசமான கேப்டன்சி. மேலும் கடைசி ஓவர் ஸ்பின்னருக்கு தரும் கேப்டனின் நோக்கமும் எனக்கு புரியவில்லை” என விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com