“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!

மும்பை அணியின் குவேனா மபகாவுக்கு ஆறுதலாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிராவோ பதிவிட்டுள்ளார்.
“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!
படங்கள்: பிராவோ / இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

மும்பை அணியின் இளம் வீரர் குவேனா மபகாவுக்கு ஆறுதலாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிராவோ பதிவிட்டுள்ளார்.

தென்னாப்ப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதானா குவேனா மபகா யு-19 போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். அதனால், இலங்கை வீரர் மதுஷனக்காவுக்கு காயம் என்பதால் அவருக்கு மாற்றாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வானார் குவேனா மபகா.

முதன்முதலாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான குவேனா மபகா ஹைதராபாத்துக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை வாரி வழங்கினார்.

“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!
பந்து வீச்சாளர்களைக் குறைகூற முடியாது: தோல்வி குறித்து ஹார்திக் பாண்டியா!

இவருக்கு ஆறுதலாக முன்னாள் பிரபல மேற்கிந்திய தீவுகள் வீரரும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளருமான டிவைன் பிராவோ ஆறுதலாக பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ராவோ கூறியதாவது:

தலை நிமிர்ந்து இரு வீரனே! குவேனா மபகா, நீ நிச்சயமாக மீண்டு வருவாய். இந்த ஒரு மோசமான போட்டியினால் உன்னை நீயே சந்தேகப்படாதே. இது மிகப்பெரிய சவால் உனக்கு. தொடரில் போகப்போக நீ சிறப்பாக செயல்படுவாய்! எனக் கூறியுள்ளார்.

பல கிரிக்கெட் பிரபலங்களும் குவேனா மபகாவுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com