விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு பிரபல ஆஸ்திரேலிய வீரர் அறிவுரை கூறியுள்ளார்.
விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!
படம் | ஐபிஎல்

தேவையில்லாத விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள் என மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவுரை கூறியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஹார்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹார்திக் பாண்டியாவை கேலி செய்து வந்தனர்.

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!
முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸிடமும், இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதிடமும் மும்பை இந்தியன்ஸ் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது போட்டிக்குப் பிறகு பாண்டியா மீதான விமர்சனங்களும், அவரது தலைமைப் பண்பின் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன.

ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப்படம்)
ஸ்டீவ் ஸ்மித் (கோப்புப்படம்)

இந்த நிலையில், தேவையில்லாத விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள் என மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அறிவுரை கூறியுள்ளார்.

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!
மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெளியிலிருந்து வரும் தேவையில்லாத விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள். நீங்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. வெளியில் இருக்கும் யாரும் நம்முடன் உடைமாற்றும் அறையில் இருப்பதில்லை. வெளியிலிருந்து வரும் தேவையில்லாத விமர்சனங்கள் எதுவும் என்னை பாதிக்காது. அந்த விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஹார்திக் கவனம் கொடுத்தால், விளையாட்டில் கவனம் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது.

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!
இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

இதுபோன்ற சூழலை இதற்கு முன் அவர் சந்தித்திருக்க மாட்டார். அவருக்கு இது மிகவும் சவாலான தருணம். மும்பையை வெற்றிகரமாக வழிநடத்திய ரோஹித் சர்மாவின் இடத்தில் அவர் உள்ளார். மும்பையில் நடைபெறும் போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.

வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com