
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான இளம் வீரர் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
அதிரடியான பேட்டிங் மற்றும் ஸ்பின் பௌலிங் என ஆல்ரவுண்டருக்கான திறமைசாலியான இவர் உ.பி.டி20 லீக்கில் 9 போட்டிகளில் 455 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். மேலும், இந்தத் தொடரிலேயே அதிக சிக்ஸர்கள் (35), அதிவேக சதமடித்த வீரருமாக கவனிக்கப்பட்டார்.
சில போட்டிகளில் மட்டுமே பேட்டிங் வாய்ப்பு கிடைத்த சமீர் ரிஸ்வி தான் ஆடிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார். ஒரு போட்டியில் மட்டுமே நன்றாக விளையாடினார். மற்ற போட்டிகளில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
தற்போது ரஹானே சரியாக விளையாடாமல் இருக்கிறார். அதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தோனி சமீர் ரிஸ்விக்கு பேட்டிங் டிப்ஸ் வழங்கிய விடியோவை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இந்த விடியோ இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு சிஎஸ்கே- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.