ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான தோல்விக்கு காரணம் குறித்து பேசியுள்ளார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்.

News image

ANI

Updated On :2 மே 2024, 11:55 am IST

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது போட்டியில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

முதலில் ஆடிய சிஎஸ்கே 162/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 17.5 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வென்றது.

இத்துடன் 5 முறை பஞ்சாப் அணி சிஎஸ்கேவை வென்று அசத்தியுள்ளது. 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கிறது சிஎஸ்கே அணி. பஞ்சாப் 7ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ருதுராஜ் அதிக ரன்கள் அடித்து விராட் கோலியினை மிஞ்சி ஆர்ஞ்ச் தொப்பியினை கைப்பற்றியுள்ளார்.

போட்டி முடிந்தபிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:

அநேகமாக 50-60 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். நாங்கள் விளையாடும்போது பேட்டிங்குக்கு சாதகமாக ஃபிட்ச் இல்லை. போகப்போக ஃபிட்ச் நன்றாக பேட்டிங் செய்ய உதவியது. இம்பாக்ட் விதிமுறையினாலும் நாங்கள் குறைவாகவே பெற்றோம். டாஸ்ஸில் வெல்வதற்காக பயிற்சிகூட எடுத்தேன்; ஆனால் களத்தில் தோற்றுவிடுகிறேன். பேட்டிங்கினைவிட டாஸ் அழுத்தமாக இருக்கிறது.

கடந்த போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் எப்படி வென்றோம் என எங்களுக்கே அதிசயமாக இருக்கிறது. 200க்கும் மேல் அடித்திருக்க வேண்டிய களத்தில் 180 கூட அடிக்க முடியவில்லை. காயம் காரணமாக முக்கிய வீரர்கள் விளையாடாதது, முதல் ஓவருக்குப் பிறகு தீபக் சஹாரின் காயம் என இவைதான் உண்மையான பிரச்னைகளாக இருக்கின்றன. விக்கெட் தேவைப்படும்போது 2 பௌலர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஈரப்பதத்தினால் ஸ்பின்னர்களை உபயோகிக்க முடியவில்லை. கடினம்தான் ஆனால் இன்னும் 4 போட்டிகள் இருக்கிறது. அதில் வெற்றி பாதைக்கு திரும்புவோம் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.