டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதா என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் கிரண் பொல்லார்டு பேசியுள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா
ஜஸ்பிரித் பும்ரா படம் | ஐபிஎல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸை வீழ்த்தியது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஜஸ்பிரித் பும்ரா
அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், தொடர்ச்சியாக சந்தித்த 4 தோல்விகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

கிரண் பொல்லார்டு
கிரண் பொல்லார்டு படம் | மும்பை இந்தியன்ஸ் (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிப்பது குறித்து எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து வீரர்களும் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதற்காகவே உள்ளோம். மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை, இந்த ஐபிஎல் தொடரில் தற்போது கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என்றார்.

ஜஸ்பிரித் பும்ரா
ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com