விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடி; பஞ்சாப் கிங்ஸுக்கு 242 ரன்கள் இலக்கு!

விராட் கோலி மற்றும் ரஜத் படிதாரின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி
விராட் கோலிபடம் | ஐபிஎல்

விராட் கோலி மற்றும் ரஜத் படிதாரின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பெங்களூரு முதலில் பேட் செய்தது.

விராட் கோலி
டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு!

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெஸ்ஸி களமிறங்கினர். டு பிளெஸ்ஸி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

படம் | ஐபிஎல்

அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். இதனையடுத்து, விராட் கோலியுடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். கிரீனும் அதிரடியாக விளையாட பெங்களூரு அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய விராட் கோலி 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் அதிரடியாக 18 ரன்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

விராட் கோலி
டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வித்வாத் கவேரப்பா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், சாம் கரண் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com