
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடினால், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 471 ரன்கள் எடுத்துள்ளார். அண்மையில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் பிரதான விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடினால், அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சஞ்சு சாம்சன் சிறப்பான வீரர். அவர் புத்துணர்ச்சியுடனும், கவனமாகவும் இருக்கும்போது அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவர் மிகவும் பணிவான வீரர். சமூக வலைத்தளங்களில் அவர் அதிகம் நேரம் செலவிடக் கூடியவர் கிடையாது. அவர் தனிப்பட்ட சுதந்திரத்தை விரும்புபவர். அவரது கிரிக்கெட் விளையாடும் திறமைகளை தவிர்த்து, அவரிடம் பல நல்ல பண்புகள் உள்ளன. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் மிகச் சிறந்த வீரராக இருக்கப்போவதாக நினைக்கிறேன். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடும் விதம் மிகவும் தெளிவாக இருக்கிறது என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.