சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டுமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்ஷன்
சாய் சுதர்ஷன் படம் | ஐபிஎல்

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டுமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 3-வது வீரராக களமிறங்கி வந்த சாய் சுதர்ஷன், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 51 பந்துகளில் 103 ரன்கள் (5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள்) எடுத்தார்.

சாய் சுதர்ஷன்
தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

இந்த நிலையில், சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டுமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கிரீம் ஸ்மித் (கோப்புப்படம்)
கிரீம் ஸ்மித் (கோப்புப்படம்)

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: சாய் சுதர்ஷனுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரராக சாய் சுதர்ஷன் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். சாய் சுதர்ஷன் இன்னும் அதிகமாக பேசப்பட வேண்டும் என்றார்.

சாய் சுதர்ஷன் ஆட்டம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லைவ்- பேசியதாவது: இளம் வீரர் சாய் சுதர்ஷன் விளையாடும் விதத்தைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அழுத்தமான சூழலிலும் அமைதியாக இருக்கிறார். அவருக்கு எப்போது பெரிய ஷாட்டுகள் விளையாட வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. சாய் சுதர்ஷன் மற்றும் ஷுப்மன் கில் இடையேயான பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது என்றார்.

சாய் சுதர்ஷன்
9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் முதல் விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com