தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

9-வது வீரராக எம்.எஸ்.தோனி களமிறங்க காரணம் என்ன? பயிற்சியாளர் பதில்!

நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க வருவதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.தோனி - படம் | ஐபிஎல்

Published On :

நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க வருவதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும், அவர் அணியில் தாமதமாக களமிறக்கப்படுவதால் ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்து வந்தனர். சில இக்கட்டான சூழலிலும் தோனி தாமதமாக களமிறங்கியது மேலும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்தியது.

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தாமதமாக களமிறங்க வருவதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஸ்டீஃபன் பிளெமிங்

ஸ்டீஃபன் பிளெமிங் - படம் | ஐபிஎல்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எம்.எஸ்.தோனியின் பணிச்சுமையை நாங்கள் குறைத்து வருகிறோம். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் அவருக்கு சிறிய அளவில் தசைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அவர் நீண்ட நேரம் பேட் செய்தால், அவர் அணியில் இடம்பெறாமல் போகும் அபாயம் உள்ளது. அதனால், அவரை ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக களமிறக்குகிறோம். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசி தோனி சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்துவார். அவர் 9-வது வீரராக களமிறங்குவதால், ஆட்டத்தில் அவர் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம் என்றார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.