
குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் சதம் விளாசி அசத்தினர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியில் அதிசயங்கள் நடந்ததை பார்த்திருப்பதாகவும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு எங்களுக்கு 0.1 அல்லது 1 சதவிகிதமாக இருந்தது. எங்கள் அனைவருக்கும் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. ஏனென்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் அணியில் அதிசயங்கள் நிகழ்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதியசங்கள் நிகழும் என்பதில் எங்கள் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.