தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவுக்கு 50-வது வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

News image

படம் | சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :12 மே 2024, 2:25 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே 50 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. சொந்த மண்ணில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த மூன்றாவது அணியாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியுள்ளது.

சொந்த மண்ணில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணிகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 52 வெற்றிகள்

மும்பை இந்தியன்ஸ் - 52 வெற்றிகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் - 50 வெற்றிகள்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 42 வெற்றிகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் - 37 வெற்றிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.