
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கான தாரக மந்திரத்தை அந்த அணியின் நிதீஷ் ராணா பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்த நிலையில், வெற்றி பெற்றாலும் ஒன்றாக வெற்றி பெறுவோம், தோல்வியடைந்தாலும் ஒன்றாக தோல்வியடைவோம் இதுவே கொல்கத்தா நைட் ரைடர்ஸின் வெற்றிக்கான தாரக மந்திரம் என அந்த அணியின் நிதீஷ் ராணா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வெற்றி பெற்றாலும் ஒன்றாக வெற்றி பெறுவோம், தோல்வியடைந்தாலும் ஒன்றாக தோல்வியடைவோம். இதுவே கொல்கத்தா அணியில் உடைமாற்றும் அறையில் வீரர்களுக்கிடையே நிலவும் சூழல். வீரர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது மிகவும் அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த விஷயம் இல்லாததாக உணர்கிறேன். பஞ்சாப் அணிக்கு எதிராக வரலாற்று தோல்வியை சந்தித்த நாள் உண்மையில் மோசமாக உணர்ந்தோம். அன்று கொல்கத்தா அணி வீரர்களில் 3-4 பேர் மட்டுமே இரவு உணவு சாப்பிட்டார்கள் என்றார்.
காயம் காரணமாக நீண்ட நாள்கள் அணியில் இடம்பெறாமலிருந்து நேற்றையப் போட்டியில் களமிறங்கிய நிதீஷ் ராணா 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.