இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த விதிமுறையின்படி ஒரு அணி பிளேயிங் லெவனை தவிர்த்து கூடுதலாக ஒருவரை இம்பாக்ட் வீரராக களமிறக்கிக் கொள்ள முடியும். நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை மீது ரோஹித் சர்மா, அக்ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் உள்ளிட்ட பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில், இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பதிலளித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறை நீடிக்க வேண்டுமா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன. இம்பாக்ட் பிளேயர் விதிமுறை இல்லையென்றால், அணிகள் குவிக்கும் ரன்களின் எண்ணிக்கை குறைந்துவிடுமா என்ற கேள்வியும் உள்ளது. இம்பாக்ட் வீரர் இல்லையென்றால், ஆட்டத்தில் அணிகள் குவிக்கும் ரன்கள் குறைந்து விடுமா என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லையென்றால், அணியின் ரன்கள் குறைந்துவிடும் என உறுதியாக கூறிவிட முடியாது. இம்பாக்ட் வீரர் விதிமுறையால் முன்வரிசை ஆட்டக்காரர்களுக்கு பலன் இருக்கிறது. ஆனால், இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லாவிட்டாலும், அவர்கள் அதிரடியாகவே விளையாடப் போகிறார்கள். ஜேக் ஃபிரேசர், டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களை நிதானமாக விளையாடக் கூறினாலும், அது நடக்கப் போவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபாசமாகப் பேசிய ரிஷப் பந்த்..! சமூக வலைதளத்தில் கடும் விமர்சனங்கள்!

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்

ரன்கள் குவிக்கத் தவறும் கேமரூன் கிரீன்; முன்னாள் ஆஸி. கேப்டன் கூறுவதென்ன?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி





