

கிழக்கு தில்லி தொகுதி, மக்களவை உறுப்பினராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கெளதம் கம்பீர் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தன்னை அரசியல் பணிகளிலிருந்து விடுவிக்குமாறு பாஜக தலைமைக்கு அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 முதல் நடைபெற்று வருகிறது. புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கம்பீர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கௌதம் கம்பீர் எப்போதும் கடுகடுவென முகத்தை வைத்திருப்பார். இதனால் ரசிகை ஒருவர் கௌதம் கம்பீர் சிரிக்கும் வரை எனது காதலினடம் நான் எனது விருப்பத்தை தெரிவிக்கமாட்டேன் என பதாகை வைத்திருந்தார்.
கௌதம் கம்பீர் இதற்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார். தனது சிரிக்கும் புகைப்படத்தினை இணைத்து இப்போது உங்களது கோரிக்கை நிறைவேற்றுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.