விராட் கோலி
விராட் கோலி படம் | ஐபிஎல்

நீண்ட காலம் ஒருவரால் விளையாட முடியாது... என்ன சொல்கிறார் விராட் கோலி? (விடியோ)

நீண்ட நாள்களுக்கு ஒருவரால் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
Published on

நீண்ட நாள்களுக்கு ஒருவரால் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டுக்காக தன்னால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என விரும்புவதாகவும், என்னுடைய கிரிக்கெட் பயணம் முடிந்தவுடன் என்னை சில காலத்துக்கு உங்களால் என்னைப் பார்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி
எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

இது தொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் எக்ஸ் தளத்தில் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அந்த விடியோவில் அவர் கூறியிருப்பதாவது: விளையாட்டு வீரர்களான எங்களின் இந்த பயணத்துக்கு முடிவு இருக்கிறது. அதனால் கிரிக்கெட்டுக்காக என்னால் முடிந்த அளவுக்கு எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை தொடர்ந்து முன்னேறிச் செல்ல வைக்கிறது.

செய்யாத விஷயங்களை நினைத்து வருந்தக் கூடாது. கண்டிப்பாக நான் வருந்த மாட்டேன். என்னுடைய கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வரும்போது நான் இந்த இடத்தை விட்டு சென்று விடுவேன். சில காலத்திற்கு உங்களால் என்னைப் பார்க்க முடியாது. அதனால் விளையாடுவதற்காக வாய்ப்பு இருக்கும்போதே, என்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே என்னை இயக்குகிறது என்றார்.

விராட் கோலி
புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 661 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com