எம்.எஸ்.தோனி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார்; பயிற்சியாளர் நம்பிக்கை!

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனிபடம் | ஐபிஎல்

மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக எம்.எஸ்.தோனி அறிவித்தார். இதனையடுத்து, சிஎஸ்கேவின் கேப்டன் பொறுப்பு ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் அணியை வழிநடத்தி வருகிறார்.

எம்.எஸ்.தோனி
12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடரில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஹஸ்ஸி
மைக்கேல் ஹஸ்ஸி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி தொடர்ந்து விளையாடுவார் என நாங்கள் நம்புகிறோம். அவர் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். போட்டிக்கு நன்றாக தயார் ஆகிறார். சிஎஸ்கேவின் பயிற்சி முகாமில் முன்னதாகவே இணைந்து தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்குப் பிறகு அவருக்கு முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கத்திலிருந்தே அவர் காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், முடிவு எம்.எஸ்.தோனியிடமே உள்ளது. அவர்தான் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

எம்.எஸ்.தோனி
புதிய அனிமேஷன் தொடரை அறிமுகப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி!

நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com