சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 சுற்றுப் போட்டி குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பேசியுள்ளார்.

News image
- படம் | AP
Updated On :25 பிப்ரவரி 2026, 3:13 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 சுற்றுப் போட்டி குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஃபிளாய்டு ரெய்ஃபெர் பேசியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாத் திடலில் நாளை (பிப்ரவரி 26) நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடுகின்றன.

குரூப் ஸ்டேஜில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணி நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான அணியாக இருந்தன. சூப்பர் 8 சுற்றிலும் இந்த இரண்டு அணிகளும் அவர்களது முதல் போட்டியில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

பேட்டிங் பயிற்சியாளர் கூறுவதென்ன?

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டி குறித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஃபிளாய்டு ரெய்ஃபெர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா என இரண்டு அணிகளுமே வலுவாக உள்ளன. இரண்டு அணிகளுமே சிக்ஸர்கள் விளாசும் திறன் கொண்டது. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், இரண்டு அணிகளிலிடமிருந்தும் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

YouTube video thumbnail

சிக்ஸர்கள் விளாசுவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வீரர்கள் ஒவ்வொரு ஓவரிலும் ரன்கள் எடுப்பது மிகவும் முக்கியம். மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களால் பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடிக்க முடியும். அதை மட்டுமே பிரதானமாக நினைக்கக் கூடாது என்றார்.

மேற்கிந்தியத் தீவுகள் - ஜிம்பாப்வே இடையே மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் 31 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. அதில் 19 சிக்ஸர்களை மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.