
ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை புதன்கிழமை வென்றது.
முதலில் ராஜஸ்தான் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களே சோ்க்க, பஞ்சாப் 18.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வென்றது. பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே அசத்தி, அணியின் வெற்றிக்கு வித்திட்டாா்.
தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:
எங்களுக்கு இன்னும் சிறிது ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது. 10-15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இது 160 ரன்களுக்கான ஆடுகளம். நன்றாக விளையாடியிருந்தால் நாங்கள் 160 ரன்களை தாண்டியிருப்போம். அங்குதான் தோல்வியை சந்தித்தோம். நான் 5 சிறப்பான பந்துவீச்சாளர்களையே பயன்படுத்தி பழக்கப்பட்டுவிட்டேன்.
தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளோம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அணியாக எது சரியாக அமையவில்லை என யோசிக்க வேண்டும். அதிகமான ஆட்ட நாயகர்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரி நேரங்களில் அவர்களில் யாராவது ஒருவர் தான் இருக்கிறேன் என்று செய்துகாட்ட வேண்டும். இதுதான் நமது திறனை காட்டுவதற்கான சரியான நேரம். 200க்கும் அதிகமான ரன்களை அடித்தே பழகிவிட்டோம். இதுமாதிரியான ஆடுகளத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும். 160-170 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அடுத்த போட்டிகளில் எங்களுக்கு சாதமாக அமையுமென நம்புகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.