ஹார்திக் பாண்டியாவை விமர்சிக்க ஏபிடி வில்லியர்ஸுக்கு தகுதியில்லை: கம்பீர் காட்டம்!
ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறார். தற்போது கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். அவரது தலைமையில் கேகேஆர் அணி முதல் அணியாக பிளே ஆஃப்-க்கு தேர்வாகியுள்ளது. இதற்கு முன்பு லக்னௌ அணிக்கு பயிற்சியாளராக இருக்கையில் 2 முறையும் லக்னௌ அணி பிளே ஆஃப்க்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.
ஹார்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு மாற்றப்பட்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டானகவும் மாற்றப்பட்டார். ஆனால் ஹார்திக் கேப்டன் ஆனதும் மும்பை அணியில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் பிளே ஆஃப்-க்கு தேர்வாகவில்லை. ஹார்த்திக்கின் கேப்டன்சியை பலரும் விமர்சிக்கிறார்கள். அப்படிதான் பீட்டர்சன், ஏபிடி வில்லியர்ஸ் விமர்சித்து இருந்தார்கள்.
இந்நிலையில் கௌதம் கம்பீர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது:
ஏபிடி வில்லியர்ஸ், பீட்டர்சன் கேப்டன்களாக இருக்கும்போது சாதித்தது என்ன? அவர்கள் கேட்னாக இருக்கும்போது குறிப்பிடத்தக்க எதையும் சாதித்தாக தெரியவில்லை. ஒன்றுமில்லை. அவர்களது கேப்டன்சியை (தலைமைப் பண்பு) எடுத்து பாருங்கள், மற்றவர்களின் கேப்டன்சியை விடவும் மிகவும் மோசமானதாக இருக்கும்.
ஐபிஎல் போட்டியில் அவரது ரன்களை தாண்டி டி வில்லியர்ஸ் எதுவும் சாதிக்கவில்லை. அணியின் பார்வையில் இருந்து பார்த்தால் வில்லியர்ஸ் எதுவும் செய்யவில்லை. ஹார்திக் பாண்டியா ஐபிஎல் கோப்பையை வென்றவர். அதனால் ஆரஞ்சு பழங்களை ஆரஞ்சு பழங்களுடன்தான் ஒப்பிட வேண்டும். ஆப்பிள்களை ஆரஞ்சுகளுடன் ஒப்பிட முடியாது எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.