ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தொடர் தோல்களிலிருந்து மீண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்ற அணிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்படம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

தொடர் தோல்களிலிருந்து மீண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்ற அணிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான வாழ்வா? சாவா? போட்டி நேற்று (மே 18) பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

தினேஷ் கார்த்திக்
ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

இந்த நிலையில், தொடர் தோல்களிலிருந்து மீண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்ற அணிகளுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தும் என பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சில பயணங்களை மக்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்வார்கள். முதல் 8 போட்டிகள் எங்களுக்கு சிறப்பானதாக அமையவில்லை. மீதமுள்ள 6 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தோம். அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளோம். இந்த அணியை மக்கள் என்றும் நினைவில் வைத்துக் கொள்வார்கள். இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. இந்த நாள் எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com