இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு ஐபிஎல் தொடர் எளிய வழியா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர் படம் | கேகேஆர் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு ஐபிஎல் தொடர் எளிய வழி கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் சிறப்பான கிரிக்கெட்டை கொடுப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ஐபிஎல் தொடர் இந்திய அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் இடமாக மாறுவதை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

கௌதம் கம்பீர்
ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

இது தொடர்பாக ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் கௌதம் கம்பீர் பேசியதாவது: எத்தனை இளைஞர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறார்கள் என்பது கவனம் கொடுக்க வேண்டிய விஷயமாக உள்ளது. இந்திய அணியில் இடம்பெற ஐபிஎல் தொடர் ஒரு எளிய வழியாக (ஷார்ட்கட்) இருக்காது என நம்புகிறேன். சர்வதேச டி20 போட்டிகளுக்கான அணிகளில் 2-3 அணிகளை தவிர்த்து, மற்ற அணிகள் இந்திய அணிக்கு சவாலளிக்கும் விதமாக இல்லை. இந்திய அணியில் உள்ள வீரர்களின் தரத்திற்கு அவர்கள் இல்லை. சர்வதேசப் போட்டிகளைக் காட்டிலும் ஐபிஎல் தொடர் மிகவும் போட்டி நிறைந்ததாக மாறிவிட்டதைப் பார்க்க முடிகிறது.

உள்ளூர் வீரர்கள் மிகவும் தரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஐபிஎல் தொடர்களில் உள்ளூர் வீரர்கள் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது, அவர்கள் டி20 போட்டியில் விளையாடுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது தெரிகிறது. நான் எந்த ஒரு விதிகளையும் மீறவில்லை. நான் எந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இருக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆக்ரோஷமாக இருக்கிறேன். அதில் தவறு என்ன இருக்கிறது. அது என்னுடைய இயற்கையான சுபாவம்.

கௌதம் கம்பீர்
எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

வெற்றி பெற வேண்டும் என்பது எனது எண்ணம். வெற்றி பெற வேண்டும் என்ற பிரச்னை எனக்கு உள்ளது. மக்கள் நான் சிரிப்பதை பார்ப்பதற்காக வரவில்லை. துரதிருஷ்டவசமாக அவர்கள் நான் வெற்றி பெறுவதைப் பார்க்க வருகிறார்கள். அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே எனது வேலை. அதனால், நான் சிரிக்கவில்லை என்பதற்கு என்ன சொல்வது. நான் ஒரு பொழுதுபோக்கு கலைஞன் அல்ல. நான் ஒரு கிரிக்கெட் வீரர். எனது வேலையை சரியாக செய்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com