
நடப்பு ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஆர்சிபியின் வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஆர்சிபி அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே பிடிக்கப் போகிறது என பலரும் எண்ணினர். ஆனால், அடுத்த 6 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து அனைவரது புருவங்களையும் உயரச் செய்தது ஆர்சிபி. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான முக்கியமான போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி அசத்தியது.
இருப்பினும், அகமதாபாதில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் ஆர்சிபி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியின் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஆர்சிபி வெளியேறியது. கோப்பையை வெல்லும் அந்த அணியின் கனவும் தகர்ந்தது.
இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அணியின் இந்த நம்பமுடியாத பயணத்தைப் பாராட்டும் விதமாக ஐபிஎல் நிர்வாகம் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த விடியோ பின்வருமாறு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.