கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்; முன்னாள் வீரர்கள் கருத்து!

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்; முன்னாள் வீரர்கள் கருத்து!
படம் | ஐபிஎல்
Published on
Updated on
2 min read

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக முன்னாள் வீரர்களான மேத்யூ ஹைடன் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைடர்ஸை சன்சைர்ஸ் மீண்டும் எதிர்கொள்ள உள்ளது.

கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்; முன்னாள் வீரர்கள் கருத்து!
எம்.எஸ்.தோனியை விளையாடக் கூடாது எனக் கூற ஒரு காரணமுமில்லை: முன்னாள் இந்திய வீரர்

இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக முன்னாள் வீரர்களான மேத்யூ ஹைடன் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் மேத்யூ ஹைடன் பேசியதாவது: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். குவாலிஃபையர் 1 போட்டிக்குப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சில நாள்கள் ஓய்வு கிடைத்தது. சன்ரைசர்ஸ் சென்னை மைதானத்தில் விளையாடிய விதத்தை அவர்கள் பார்த்திருப்பார்கள். சன்ரைசர்ஸின் பலம் மற்றும் பலவீனம் என்னவென்று கொல்கத்தாவுக்கு தெரிந்திருக்கும். ஏற்கனவே சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளதால், கொல்கத்தா மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்.

அந்த அணியில் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி போன்ற அபார சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டுமென்றால், மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றுள்ளனர். முக்கியமான போட்டிகளில் இதுபோன்று தோல்வியிலிருந்து வெற்றிப்பாதைக்கு திரும்புவது மிகவும் கடினம் என்றார்.

கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்; முன்னாள் வீரர்கள் கருத்து!
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? காசி விஸ்வநாதன் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இதுதொடர்பாக பேசியதாவது: சன்ரைசர்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் தோல்வியடைந்த விதத்தை நான் விரும்பவில்லை. அதனால், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியும் அவர்களுக்கு கடினமானதாகவே இருக்கப் போகிறது. கொல்கத்தாவுக்கு எதிரான குவாலிஃபையர் 1 போட்டியில் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட்டுக்கு பந்துவீச வாய்ப்பு கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரிகள் விளாசினார். சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றது கொல்கத்தாவுக்கு மிகுந்த நம்பிக்கையளித்துள்ளது. அதனால், நாளை நடைபெறும் இறுதிபோட்டியிலும் கொல்கத்தாவுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com