
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடும் விதத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் சைமன் ஹெல்மாட் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைடர்ஸை சன்சைர்ஸ் மீண்டும் எதிர்கொள்ள உள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடும் விதத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என அந்த அணியின் உதவிப் பயிற்சியாளர் சைமன் ஹெல்மாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் எங்களது ஸ்டைலில் தொடர்ந்து விளையாட வேண்டும். இத்தனை ஆண்டுகளாக அதனையே செய்து வருகிறோம். அதன் காரணமாகவே எங்களால் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடிந்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் எங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகிறோம். அதில் எந்தவொரு மாற்றமும் செய்யப் போவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.