சோர்வடைந்து விட்டோம்; தோல்வி குறித்து குமார் சங்ககாரா!

ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தித்த தோல்விகளுக்கான காரணத்தை சங்ககாரா தெரிவித்துள்ளார்.
குமார் சங்ககாரா
குமார் சங்ககாராபடம் | ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தித்த தோல்விகளுக்கான காரணத்தை அந்த அணியின் இயக்குநர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் வெற்றிகரமாக தொடங்கி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்தது. ஆனால், ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் அந்த அணி வரிசையாக தோல்விகளை சந்தித்தது. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் தோல்வியைத் தழுவியதால், ஐபிஎல் கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் இழந்தது.

குமார் சங்ககாரா
கொல்கத்தா அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்; முன்னாள் வீரர்கள் கருத்து!

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் பிற்பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தித்த தோல்விகளுக்கான காரணத்தை அந்த அணியின் இயக்குநர் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்ததாக நினைக்கிறேன். இந்த ஐபிஎல் தொடரை நன்றாக தொடங்கினோம். அதன்பிறகு, ஹைதராபாதுக்கு எதிரான போட்டியிலும், தில்லியில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்தோம். சில நேரங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளும் தோல்விகளும் கிடைக்கும். தொடக்கத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. அதன்பின், தொடர்ச்சியாக வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. டி20 போட்டிகளில் இது சகஜமான ஒன்று.

குமார் சங்ககாரா
எம்.எஸ்.தோனியை விளையாடக் கூடாது எனக் கூற ஒரு காரணமுமில்லை: முன்னாள் இந்திய வீரர்

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினர். தொடரின் பிற்பாதியில் சிறிது சோர்வடைந்துவிட்டோம். ஆனால், இதுபோன்ற நீண்ட தொடர்களில் விஷயங்கள் சகஜம். குவாலிஃபையர் 2 போட்டியில் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர். விக்கெட்டுகளை இழக்காமலிருப்பது மிகவும் முக்கியம். ஜோஸ் பட்லர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆவேஷ் கான் சிறப்பாக பந்துவீசினார். அவரது சிறப்பான செயல்பாடுகளே அவருக்கு டி20 உலகக் கோப்பைக்கான ரிசர்வ் வீரர் இடத்தை பெற்றுத் தந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com