
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கொண்டாடியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மே 26) நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாதை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக சுனில் நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடும் விடியோவை கொல்கத்தா அணி நிர்வாகம் அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த விடியோ பின்வருமாறு:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.