கேகேஆர் அணிக்காக 50-வது போட்டியில் ரிங்கு சிங்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 50-வது போட்டியில் ரிங்கு சிங் விளையாடுகிறார்.
கேகேஆர் அணிக்காக 50-வது போட்டியில் ரிங்கு சிங்!
Updated on
1 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 50-வது போட்டியில் ரிங்கு சிங் விளையாடுகிறார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் விளையாடி வருகிறது.

50-வது போட்டியில் ரிங்கு சிங்

இன்றையப் போட்டி ஐபிஎல் தொடரில் ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக விளையாடும் 50-வது போட்டியாகும். 50-வது போட்டியில் விளையாடும் ரிங்கு சிங்குக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, 50 என்ற எண் எழுதப்பட்ட சீருடையை வழங்கி கௌரவித்தார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக இதுவரை 49 போட்டிகளில் (இன்றையப் போட்டி நீங்கலாக) விளையாடியுள்ள ரிங்கு சிங் 922 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com