
பெங்களூரு சின்னசாமி திடலில் அதிக தோல்விகளைச் சந்தித்து பெங்களூரு அணி மோசமான சாதனையை படைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் முதலிரண்டு போட்டிகளில் கொல்கத்தா, சென்னை ஆகிய அணிகளை வெற்றிகொண்ட ஆர்சிபி, உள்ளூர் திடலில் நடைபெற்ற போட்டியில் குஜராத்திடம் தோல்வியைத் தழுவியது.
பின்னர், மும்பையில் நடைபெற்ற போட்டியில் மும்பையை வென்று சாதனை படைத்த அடுத்த போட்டியே தில்லிக்கு எதிராக தோல்வியடைந்து. வெளியே நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள ஆர்சிபி அணி, சொந்த திடலில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியையேத் தழுவியிருக்கிறது.
இதையும் படிக்க: பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகல்: தென்னாப்பிரிக்க வீரருக்கு ஓராண்டு தடை!
சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் 45-வது தோல்வி இதுவாகும். இது ஒரு அணியின் சொந்த மைதானத்தில் பெற்ற அதிகபட்ச தோல்வியாகும்.
பெங்களூருவுக்கு அடுத்தபடியாக தில்லி கேப்பிடல்ஸ் அணி அருண் ஜெட்லி மைதானத்தில் 44 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் 38 போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இதையும் படிக்க: இது எனது ஊர், எனது திடல்..! வைரலாகும் கே.எல்.ராகுலின் வெற்றிக் கொண்டாட்டம்!