
ஸ்ரேயாஸ் ஐயரின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும் என பஞ்சாப் கிங்ஸின் இளம் வீரர் நேஹல் வதேரா மனம் திறந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேஹல் வதேரா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி அவரை விடுவித்ததையடுத்து, பஞ்சாப் கிங்ஸ் அவரை ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நேஹல் வதேரா 114 ரன்கள் குவித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியதென்ன?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் நேஹல் வதேரா, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் குறித்து மனம் திறந்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும் உடனடியாக எளிதில் பேசி பழகுகிறார். அந்த விஷயம் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவரிடம் உள்ள நம்பிக்கை என்னை வியப்படைய வைக்கிறது. அணியில் கேப்டன் இந்த அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கும்போது, மற்ற வீரர்களும் நேர்மறையாக உணர்வார்கள்.
கடந்த காலத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் கூட்டணி தில்லி அணிக்காக சிறப்பாக இருந்துள்ளது. அந்த கூட்டணி தற்போது சிறப்பாக தொடர்கிறது. ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து செயல்படுவது சிறப்பான உணர்வை கொடுக்கிறது. அவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு கிடைத்த வரம் போன்று உணர்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.