ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்கள்! வைரலாகும் மீம்ஸ்!

ரோஹித் சர்மாவை மும்பை கேப்டனாக்க வலியுறுத்தும் ரசிகர்களின் வைரல் மீம்ஸ் பற்றி..
ரோஹித் சர்மா - ஹார்திக் பாண்டியா
ரோஹித் சர்மா - ஹார்திக் பாண்டியா
Published on
Updated on
1 min read

நடப்பு ஐபிஎல் தொடரில் மீதமிருக்கும் போட்டிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்கக் கோரி இணையதள ரசிகர்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடப்பு ஐபில் தொடரில் 5 முறை சாம்பியன்களான சென்னை மற்றும் மும்பை அணிகள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 8-வது இடத்திலும், சென்னை அணி 9-வது இடத்திலும் இருக்கின்றன.

சென்னை அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் விலகியதால், மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். கேப்டனாக இல்லாதபோதும்கூட சென்னை அணி கேப்டன் ருதுராஜை தோனி வழிநடத்தினார்.

இதையும் படிக்க: பெங்களூரு சின்னசாமி திடலில் அடிவாங்கும் ஆர்சிபி.. உள்ளூரில் மோசமான சாதனை!

அதேவேளையில் மும்பை அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து பழைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஆலோசனைகளையோ அவரின் தலைமையையோ யாரும் விரும்பவில்லை. மேலும், அவர் இம்பாக்ட் வீரராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்.

தோனி கேப்டனாக இல்லாதபோது சென்னை அணி 42 சதவிகிதப் போட்டிகளில் வென்றிருந்தாலும், மும்பை அணி ரோஹித் இல்லாதபோது வெறும் 26 சதவிகிதப் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

இதனால், ஹார்திக் பாண்டியா தொடரிலிருந்து விலக வேண்டும் என்றும், அதற்கு பாண்டியா ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், ரோஹித் சர்மாவே மீண்டும் கேப்டனாக வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகல்: தென்னாப்பிரிக்க வீரருக்கு ஓராண்டு தடை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com