மிகவும் நம்பிக்கையின்றி விளையாடும் சிஎஸ்கே: முன்னாள் ஆஸி. கேப்டன்

சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திராபடம் | AP
Published on
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் நம்பிக்கையின்றி விளையாடுவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நேற்று (ஏப்ரல் 11) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது.

மைக்கேல் கிளார்க் கூறுவதென்ன?

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் நம்பிக்கை குறைவாக இருப்பதாகவும், அவர்கள் விளையாடுவது இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு இல்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: சேப்பாக்கம் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருப்பது போன்று தெரிந்தது. புதிய பந்தில் பந்துவீச்சு நன்றாக இருந்தது. சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் உதவியது. சென்னை சூப்பர் கிங்ஸின் திட்டம் தவறாகிவிட்டது என நினைக்கிறேன். அவர்கள் நம்பிக்கையன்றி விளையாடியது போன்று இருந்தது. ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் முனைப்பு காட்டியவாறு தெரியவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் பழமையான அணுகுமுறையை மேற்கொள்வதாக தெரிகிறது. மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் ஏற்படும் தோல்விகளை தவிர்ப்பதற்காக விளையாடுவது போன்று தெரிகிறது. அப்படி செய்வதற்கு பதிலாக, அவர்கள் ரிஸ்க் எடுத்து விளையாடி ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கலாம் என்றார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com