அபிஷேக் சர்மாவின் மிகப் பெரிய ரசிகன் நான்: பாட் கம்மின்ஸ்

அபிஷேக் சர்மாவின் பேட்டிங்குக்கு தான் ஒரு மிகப் பெரிய ரசிகன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மாபடம் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

அபிஷேக் சர்மாவின் பேட்டிங்குக்கு தான் ஒரு மிகப் பெரிய ரசிகன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அபார ஆட்டத்தினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அபிஷேக்கின் பேட்டிங்குக்கு மிகப் பெரிய ரசிகன்

தொடர் தோல்விகளிலிருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பிய நிலையில், அபிஷேக் சர்மாவின் பேட்டிங்குக்கு தான் ஒரு மிகப் பெரிய ரசிகன் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த வெற்றி மிகவும் அற்புதமாக இருக்கிறது. இந்த மாதிரியாக விளையாடுவதுதான் எங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. இது பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளம். ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறைவாக கொடுத்தால், ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் மகிழ்ச்சியடையலாம். அபிஷேக் சர்மாவின் பேட்டிங்குக்கு நான் மிகப் பெரிய ரசிகன்.

அதிரடியாக விளையாடும் எங்களது அணுகுமுறையை மாற்றப் போவதில்லை. எங்களது திறன் மீது நம்பிக்கை இருக்கிறது. ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமளித்தார்கள். அவர்கள் அணிக்கு ஆதரவு அளிப்பது நம்பமுடியாத விதமாக இருந்தது. அவர்கள் எப்போதும் சன்ரைசர்ஸ் அணியின் கொடியினை அசைத்து எங்களை உற்சாகப்படுத்தியது எங்களுக்கு ஊக்கமளித்தது என்றார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com